நாங்க வித்தியாசமாத் தான் யோசிப்போம்! உ.பி வேட்பாளரின் ஐடியா

உத்தரபிரதேசத்தில் கிராம பஞ்சாயத்துகள், சேத்ரா பஞ்சாயத்துகள் மற்றும் சில பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 15 ம் தேதியும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 19, 26, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இரண்டு வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது துண்டு பிரசுரங்களை நாய்களின் உடம்பில் ஒட்டி பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இது குறித்து, அவர்களிடம் கேட்கையில், “பிரச்சாரத்திற்கு நாய்களை பயன்படுத்துவதால் அவற்றை நாங்கள் துன்புறுத்தவில்லை. அவைகளுக்கு நாங்கள் உணவளித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *