பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்திலும் ரோமியோ எதிர்ப்பு படை! யோகி ஆதித்ய நாத் உறுதி

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரை மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நான்காம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அங்கு பாஜக சார்பில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஹூக்லியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், “மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சகோதர சகோதரிகளின் நலன் காக்க உத்தர பிரதேசத்தில் உள்ளதைப் போல ரோமியோ எதிர்ப்பு படைகள் உருவாக்கப்படும்.

அதன் மூலம், பெண்களின் பின்னால் சுற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஒடுக்கப்படுவார்கள். தேர்தல் முடிந்த பின் மம்தாவும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கூற ஆரம்பித்து விடுவார். துர்கா பூஜையை அனுமதிக்காதவர்கள் இப்போது சாண்டி பாதையை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தங்களை இந்து என்று அழைக்க தயங்கியவர்கள் இப்போது தங்கள் இந்து அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *