உத்தரபிரதேச பட்டாசு தொழிற்சாலையில் வெடிவித்து,5 பேர் பலியான பரிதாபம்
உத்தரபிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.மேலும்,4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யூசுப் என்பவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில்,இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.வீட்டில் ஒரு அறை முழுவதும் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இருந்ததே இந்த கோர விபத்திற்கு காரணம் ஆகும்.
காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.