புதுச்சேரியிலும், மேற்கு வங்கத்திலும் பாஜக வெற்றி நிச்சயம் – ஜே.பி. நட்டா

தமிழகம், அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் தேர்தல் தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அசாமில் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த மாநில மக்களை ஏமாற்றி வளர்ச்சியை தடுத்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி தான் நிச்சயம் அமையும். நந்திகிராமத்தில் மம்தா பானர்ஜி நிச்சயம் தோல்வி அடைந்து விடுவார். மேலும், அசாம் மற்றும் புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி ஆட்சி தான் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.