பொருளாதார வளர்ச்சியை விட வேலைவாய்ப்பே எனது குறிக்கோள் – ராகுல்
காங்கிரஸ் எம்.பி ராகுலும் அமெரிக்காவின் ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பேராசிரியரும் அந்நாட்டு முன்னாள் வெளியுறவுச் செயலருமான நிக்கோலஸ் பர்ன்ஸ் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
அதில், ராகுல் “ வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். எனவே, நான் பிரதமரானால் பொருளாதார வளர்ச்சியை விட வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்துவேன்.
தேர்தலை எதிர்கொள்ள அரசியலமைப்புகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அது தவிர நீதித்துறை அனைவரையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஊடகங்கள் ஓரளவுக்கு சுதந்திரமாக இயங்க வேண்டும். அரசியல் கட்சிகள் அனைத்துமே சமநிலையில் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆனால், தற்போது என்ன நடக்கிறது. அசாமில் வாக்கு இயந்திரத்தை பாஜக வேட்பாளரின் காரிலேயே அதிகாரிகள் எடுத்துச் செல்கின்றனர். இதுபற்றி எந்த ஊடகமும் துணிந்து பேச முன் வர வில்லை” என தெரிவித்துள்ளார்.