பஞ்சாபில் இனி பெண்களுக்கு இலவச பயணம்
பஞ்சாபின் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த மாதம், அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று இந்த திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், இனி பஞ்சாப் மாநிலத்தின் அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
மேலும், அரசுக்கு சொந்தமானதாக இருந்தாலும் ஏ.சி. பஸ்கள், வால்வோ பஸ்கள் மற்றும் எச்.வி.ஏ.சி பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.