அமித்ஷா பேரணியின் போது விபத்து! பெண்கள் காயம்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் பேரணி தொடங்கியது.
கருவடிக்குப்பம் என்ற பகுதியில் பேரணி சென்று கொண்டிருந்த போது, அமித்ஷாவை பார்ப்பதற்காக வாய்க்காலின் ஓரத்தில் பொது மக்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த மக்கள் அமித்ஷாவுக்கு கைகளை அசைத்து உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர். திடீரென வாய்க்காலின் மேல் போடப்பட்டிருந்த ஸ்லாப் திடீரென உடைந்து அதன் மேல் நின்றிருந்த பலர் வாய்க்காலில் விழுந்தனர்.
விழுந்தவர்களை காவல் துறையினர் மட்டும் தான் மீட்டனர். கட்சியினர் யாரும் கண்டு கொள்ளக் கூட இல்லை. கடுமையாக காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.