கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்

வண்ணங்களால் நிறைந்துள்ள ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இன்று ஹோலி பண்டிகை கொண்டாட சில இடங்களில் கட்டுப்பாடு உள்ளது.
மகாராஷ்டிராவில், அதிகமாக கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், அங்கு ஹோலி கொண்டாட தடை உள்ளது. இதனால், மக்கள் வீடுகளிலேயே கொண்டாடுகின்றனர். ஆனால், பஞ்சாப் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கமான உற்சாகத்துடன் ஹோலி கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹோலிக்கு பிரதமர், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி, “அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சியின், சந்தோஷத்தின், குதூகலத்தின் விழாவான இத்திருநாள் நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியும், புதிய உத்வேகமும் நல்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.