டாடிக்கு மட்டும் தான் தாடி வளர்கிறது பொருளாதாரம் அல்ல – மம்தா

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. முன்னதாக நேற்று, திரிணாமும் கட்சி சார்பில் மம்தா பானர்ஜி கடைசி கட்ட பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, “பாஜக கட்சிக்கு இரண்டு சிண்டிகேட்டுகள் உள்ளன. ஒன்று டெல்லியில் இருந்து கொண்டு குஜராத் முதல் உத்தரபிரதேசம் வரை மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறது. இரண்டாவது அவர்களுக்கு நட்டு கழண்டு விட்டது.

மோடி தாடியை வளர்த்துக் கொண்டு தன்னை விவேகானந்தர் என்றும், சில சமயங்களில் ரவிந்திரநாத் தாகூர் என்றும் அழைத்துக் கொள்கிறார். தற்போது, விளையாட்டு அரங்கத்திற்கு தன் பெயரை வைத்துள்ளார்.

இன்னும் சில நாட்களில், இந்தியாவையே விற்று மோடி பெயரை சூட்டி விடுவார். அவரின் தாடி மட்டும் தான் வளர்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் தன் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *