குடியரசுத் தலைவருக்கு தீவிர சிகிச்சை!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால், அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அவர் ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு திவீர சிகிச்சை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *