ராகுலுக்கு பகுத்தறிவு இல்லை – யோகி ஆதித்ய நாத்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காணொலி வாயிலாக ‘இந்தியா எக்கனாமிக் கான்க்ளேவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். உத்தரபிரதேச அரசு மீது ராகுல் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அதற்கு யோகி ஆதித்ய நாத் பதிலளித்துள்ளார்.

அதில் அவர், “ராகுல் காந்தி தொகுதிக்கு அரிதாக தான் வருகிறார். அப்படி இருக்க அவருக்கு இங்கு நடப்பது எப்படி தெரியும். வயநாடு மற்றும் அமேதி தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் வயநாடு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால், அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் மோசமாகத் தோற்றார்.

அவர் பேசுவது அனைத்தும் கடன் வாங்கிய அறிவு தான். அதனால், அவருக்கு பகுத்தறிவு இல்லை. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *