மோடிக்கு சிறப்பான வரவேற்பளித்த வங்கதேசம்

1917 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உருவெடுத்தது. வங்கதேசம் தனி நாடாக உருவெடுத்ததில் இந்தியாவிற்கு அதிக பங்கு உள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தின் சுதந்திர பொன்விழா இன்று தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
பொன்விழா கொண்டாடத்தில் பங்கேற்க, இந்திய பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷே க் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வங்கதேசத்துக்கு சென்றிருக்கிறார்.
தலைநகர் டாகாவில் நடக்கும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். வங்கதேசம் சென்ற மோடியை பிரதமர் ஷே க் ஹசீனா பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, அந்நாட்டு தேசிய கீத முழக்கத்துடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.