மோடிக்கு எதிராக வங்கதேசத்தில் போராட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்திற்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்ள இருந்தார்.இந்நிலையில்,பிரதமர் மோடிக்கு எதிராக வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்கா நோக்கி சென்றனர்.நிலையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.போராட்டத்தை கைவிடக்கோரி காவல்துறையினர் வலியுறுத்தியும் கேட்க மறுத்ததால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால், காவல்துறையினர் கண்ணீர் புகைக் கொண்டு வீசி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர் இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

காவல்துறையினர் 33 பேரினை கைது செய்துள்ளனர்.இந்த வன்முறையில் பலர் காயமடைந்துள்ளனர்.

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு பிரதர் மோடி முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்பதே இந்த போராட்டத்திற்கு காரணம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *