‘உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி’ ; புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை

தமிழகம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில், அதிமுக கூட்டணியில் பாஜக தேர்தலை சந்திக்கிறது.

புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. புதுச்சேரி பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களில் 50 ஆயிரம் பேரிடம் அவர்கள் தேவைகள் குறித்த கருத்துகளைக் கேட்டு ‘உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி’ என தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், புதுச்சேரியில் உள்ள எந்த ஆன்மீகத் தலங்களும் அரசால் நடத்தப்பட மாட்டது. புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச உயர்கல்வி, இளைஞர்களுக்கு 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரிக்கு என தனிபள்ளி கல்வி தேர்வாணையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *