ஏழைகளுக்கு பாஜக எதையும் செய்யவில்லை – ராகுல் குற்றச்சாட்டு
அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27 ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ராகுல் காந்தி, டின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜோர்ஹாட் பகுதியில்பிரச்சாரம் மேற்கொண்ட போது, மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாயாக இருந்தது. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஐனநாயகக் கூட்டணியில் விலை 1000 ரூபாயை நெருங்கியுள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் உள்ள இரண்டு மூன்று தொழிலதிபர்கள் மட்டுமே பயனைகின்றனர். பாஜக ஆட்சியில் ஏழைகள் மேலும் வஞ்சிக்கப்படுகின்றனர். தொழிலதிபர்களின் வங்கிக் கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.