பெண்கள் ஆடை குறித்து சர்ச்சை பேச்சு! பிரியங்கா காந்தி பதிலடி!

உத்தரகாண்டி மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்தாண்டு நடைபெற்ற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

நேற்று, டேராடூனில் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்காக  ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் திராத் சிங் ராவத்,  ”அண்மையில் விமானத்தில் செல்லும் போது ஒரு கிழிந்த ஜீன்ஸ் அணிந்த ஒரு தன்னார்வ தொண்டு பெண் தனது குழந்தைகளுடன் பயணம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இது போன்ற பெண்கள் சமூகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வெளியே சென்றால், சமூகத்துக்கு, நம் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான செய்தியை நாம் தருகிறோம்?  இது நல்லதா?” என்று பேசியிருந்தார்.

இவரின் இந்தப் பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, தன் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சீருடையை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “அடகடவுளே அவர்களுது முழங்கால்கள் தெரிகின்றன” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *