பெண்கள் உடை குறித்து சர்ச்சை கருத்து – சர்ச்சையில் உத்தரகாண்ட் முதல்வர்!

கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு சமூகத்திற்கு சேவையாற்றும் பெண்கள் என்ன மாதிரியான முன்னுதாராணத்தை கொடுக்கிறார்கள் என உத்தரகாண்ட் முதல்வர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டி மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்தாண்டு நடைபெற்ற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
நேற்று, டேராடூனில் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் திராத் சிங் ராவத், ”அண்மையில் விமானத்தில் செல்லும் போது ஒரு கிழிந்த ஜீன்ஸ் அணிந்த ஒரு தன்னார்வ தொண்டு பெண் தனது குழந்தைகளுடன் பயணம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற பெண்கள் சமூகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வெளியே சென்றால், சமூகத்துக்கு, நம் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான செய்தியை நாம் தருகிறோம்? இது நல்லதா?.” என்று பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பெண்களை பேசியது பிற்போக்கு தனமாக இருந்ததாக சமூகவலைதளங்களில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்