கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி!
குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாநில அமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். மேலும் நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மக்கள் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில அமைச்சர் ஈஸ்வர் சிங் படேல் நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.