111 நாட்களாக தொடரும் போராட்டம்!
தலைநகர் டெல்லியில், மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் இன்று 111 ஆவது நாளை எட்டியுள்ளது. விவசாய சங்கத்தினர் இதைப் பற்றி எல்லாம் கவலைபடாமல், மத்திய அரசு மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும், தேவைப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை கூட போராட்டம் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.