அனைத்து கட்சி முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது தான் பாதிப்பு குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

அதற்குள் பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் இரண்டாவது அலை வீசுமா என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. அதன்படி, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கொரோனாவின் தீவிர பரவலால் நாக்பூரில் ஒரு வாரம் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்திலும், நான்கு மெட்ரோ நகரங்களிலும் மார்ச் 31 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நாளை மதியம் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். அதில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *