நான் காயம்பட்ட புலி! சக்கரநாற்காலியில் அமர்ந்து மம்தா ஆவேசப் பிரசாரம்
நந்திகிராமம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற மம்தா பானர்ஜி, காரில் இருந்து தவறிவிழுந்தார். இது, பாஜகவின் சதி என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மம்தா, சிறிது உடல் நலம் தேறி வீடு திரும்பிள்ளார். அசாமில் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நெருங்குவதால், ஓய்வு எடுக்க வேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனையையும் உதாசீனப்படுத்தி சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறே தேர்தல் பரப்புரைகளை செய்து வருகிறார்.
நான் காயம்பட்ட புலி, காயம்பட்ட புலி தான் ஆபத்தானது. மோடி திறமையற்றவர்; அவருக்கு நாட்டை சரியாக நடத்தத் தெரியவில்லை. திரிணாமூல் காங்கிரஸ் போல, அதிக மக்கள் பணியாற்றும் கட்சி எங்கும் இல்லை என ஆவேசமாக பேசியுள்ளார்.