இந்த ஆண்டு நீட் தேர்வு ஒரு முறை மட்டுமே நடைபெறும் – ரமேஷ் பொக்ரியால்
2021-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஒரு முறை மட்டுமே நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.இதனை அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.நீட் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடைபெறுகிறது.இதனை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.