மம்தா மீது பாஜக தாக்குதலா?

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்த பின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி கீழே விழுந்தார்.

இதுகுறித்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் காரில் ஏற முயன்றபோது என்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டனர். எனது காலைப் பாருங்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல். நிச்சயமாக இதில் சதி இருக்கிறது. என்னைச் சுற்றி திடீரென்று காவலர்கள் யாருமே இல்லை” என்றார்.

முதல்வர் மம்தாவை காரின் பின்பக்க சீட்டில் அவரது மெய்க்காவலர்கள் ஏற்றி உட்காரவைக்கும் காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானது.

நந்திகிராம் தொகுதியில் நேற்று மம்தா தங்கவிருந்த நிலையில் திடீர் தாக்குதலால் அவர் கொல்கத்தா அழைத்துச்  செல்லப்பட்டு அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆளுநர் தன்கர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…