சவுதி பிரதமரை இந்தியாவிற்கு அழைத்த மோடி!

 சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி இந்தியாவிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள், கொரோனா சூழல் பற்றி பேசினார். இந்தியாவுக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

2019-ல் சவுதி – இந்தியா இடையே இருதரப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. அதனுடைய செயல்பாடுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா – சவுதி இடையேயான உறவில் நிலையான வளர்ச்சி இருப்பது குறித்து திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். உரையாடலின் போது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுப்படுத்தும் படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இந்திய பொருளாதாரத்தில் சவுதி முதலீட்டாளர்களுக்கு இருக்கக் கூடிய வாய்ப்புகள் குறித்தும் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையேயான சிறப்பு நட்பு மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை கருத்தில் கொண்டு, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான முயற்சிகளை ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரிக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். இந்தியாவுக்கு விரைவில் வருகைத் தருமாறு சவுதி இளவரசருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…