பொது இடங்களில் புர்கா அணியத் தடை!

சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்காஉள்ளிட்ட ஆடைகள் அணியத் தடைவிதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அம்மாதிரியான ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்து தடை விதிக்கும் சட்டத்துக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஐரோப்பிய நாடுகளில் முகத்தை மறைக்கும் புர்கா போன்ற ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்விட்சர்லாந்திலும் கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய ஆடைகளுக்குத் தடை வேண்டி விவாதங்கள் பரவலாக நடத்தப்பட்டு வந்தன. இந்தப் புதிய சட்டத்துக்கு எதிராகப் பொதுமக்கள் வாக்களிக்குமாறு ஸ்விட்சர்லாந்து அரசே வலியுறுத்தியது. இதனை அந்நாட்டு மக்களும் நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு எதிராக 14,26,992 பேர் வாக்களித்தனர். 13,59,621 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்தில் விரைவில் தடை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடை அணிவது அடிப்படை வாதம் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, இலங்கை, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…