நானே ஒரு பிராமிண் தான் என்னிடம் உங்கள் வேலையை காட்டாதீர்கள் – மம்தா

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மம்தா கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளி சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் மம்தா. முன்னதாக நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய அவர் ‘என்னிடம் இந்துத்துவா முத்திரையை பயன்படுத்தி அரசியல் செய்ய நினைக்காதீர்கள். நான் ஒரு பிராமண பெண். ஒவ்வொரு நாளும் சந்திபாத் செய்துவிட்டுதான் கிளம்புகிறேன். என்னுடைய முந்தைய தொகுதியான பாபானிபூரை எந்தளவு மேம்படுத்தியுள்ளேனோ அது போல நந்திகிராமும் உயரும்’ என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…