சொமட்டோ ஊழியரால் தாக்கப்பட்ட பெங்களூரு பெண்
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/03/zomato.jpg)
பெங்களூருவைச் சேர்ந்த ஹித்தேசா சந்திராணி சமூக ஊடகத்தில் பிரபலமானவர்.சந்திராணி சொமட்டோவில் தனக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார்.நீண்ட நேரம் ஆகியும் அவருக்கு உணவு வந்து சேரவில்லை.இதனையடுத்து சந்திராணி சொமட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு புகார் அளித்துக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த டெலிவரி பாய் சந்திராணியை தாக்கியுள்ளார்.இதனால் காயமடைந்த சந்திராணி முகத்தில் ரத்தம் வழிய இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.இதன்பின்,சொமட்டோ நிறுவனம் அந்த ஊழியரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.