தேவேந்திர குல வேளாரர் மசோதா இன்று தாக்கல்!

தமிழகத்தில் 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரில் அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பட்டியலினத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட வேண்டும் என்று அந்த சமூகத்தினர் மற்றும் புதிய தமிழகம் கட்சி மற்றும் தலித் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக, கடந்த 2019 மார்ச் மாதம், ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2020 டிசம்பரில் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயரிட வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இருப்பினும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இன்று தேவேந்திர குல வேளாரர் மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…