வாட்டும் குளிர்… கொளுத்தும் வெயில்… 100வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளின் போராட்டம் நூறாவது நாளை இன்று எட்டியுள்ளது.

டெல்லியின் சிங்கு, திக்கிரி மற்றும் காசிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறவலியுறுத்தி கடந்த நவம்ப மாதம் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் நூறாவது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தின் நூறாவது நாளை கருப்பு தினமாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். இதனையெட்டி டெல்லி எல்லையான Kundli-Manesar- Palwal சாலையில் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணிவரை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பாரதிய கிஷான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் டிகைத் கூறுகையில், “வேளாண் திருத்த சட்டம் குறித்து விவசாயிகளுடன் மத்திய அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தாலும் இதுவரை சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும்வரை போராட்டம் மேலும் வலுபெற்று கொண்டுதான் இருக்கும். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகதான் இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…