திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி பயம் – சாமிநாதன்

புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் ரங்கசாமி அதிருப்தியில் இருந்தார். இதனால் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டும் எனத் தொடர்ந்து ரங்கசாமியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை, ரங்கசாமி தனது முடிவு என்ன என்பதை வெளியில் சொல்லவில்லை, பிரதான எதிர்க்கட்சி என்பதால் ரங்கசாமி என்ன செய்ய போகிறார் என்பது புதுச்சேரி அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், தோல்வி பயத்தால் மக்களைக் குழப்பும் வேலையில் புதுச்சேரி திமுக -காங்கிரஸ் கூட்டணி ஈடுபடுகிறது. மக்கள் நலன் கருதி ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பார்; என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஆனால், புதுச்சேரியில் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என்னும் உறுதிசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…