சதமடித்த விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் எல்லை பகுதிகளில் போராடி வருவது 100-வது நாளை எட்டியுள்ளது.இதனையடுத்து விவசாயிகள் டெல்லியின் வெளிப்புற எல்லை சாலைகளில் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.போராட்டம் 100 நாள்களை எட்டியும் எந்தவொரு சுமூகமான முடிவும் எடுக்கப்படவில்லை.இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.