மேற்கு வங்கத்தில் லவ் ஜிகாத் அதிகரிப்பு- யோகி ஆதித்யநாத்
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கு வங்கத்தில் கால்நடை கடத்தல் மற்றும் லவ் ஜிகாத் நடப்பதாகவும் அதனை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க-வின் பரிவர்த்தன யாத்ராவில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் லவ் ஜிகாத் அரங்கேறி கொண்டிருப்பதாக ஆதித்யநாத் கூறினார்.மேலும் ஆளும் அரசானது அதற்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகின்ற தேர்தலில் பா.ஜ.க மேற்கு வங்கத்தில் ஆட்சியமைத்து இவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என பேசினார்.