கொரோனா தொற்று : மத்தியபிரதேச பாஜக எம்பி மரணம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச மாநிலத்தின் கண்ட்வா தொகுதி மக்களவை எம்பி நந்த்குமார் சிங் செளகான்,மரணமடைந்தார்.

நந்த்குமார் செளகானின் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாகவே போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திரு.நந்த்குமார் செளகான், கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அவரது உடல், அவரது சொந்த ஊரான காண்ட்வாவுக்கு இன்று பிற்பகல் கொண்டு செல்லப்படும் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். திரு.நந்த்குமார் செளகான், ஆறாவது முறையாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். மத்திய பிரதேசத்தின் மாநில தலைவராகவும் கடந்த 2015ம் ஆண்டு பதவி வகித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், கண்ட்வாவைச் சேர்ந்த மக்களவை எம்.பி., ஸ்ரீ நந்த்குமார் சிங் சவுகான் மறைந்ததில் நான் வருத்தப்படுகிறேன். பாராளுமன்ற நடவடிக்கைகள், நிறுவன திறன்கள் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் நந்த்குமார் செளகான் பங்களித்ததற்காக நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இரங்கல் செய்தியில், மத்தியப் பிரதேச முன்னாள் மாநிலத் தலைவரும், காண்ட்வாவைச் சேர்ந்த எம்.பி.யுமான நந்த்குமார் சிங் செளகான் மரணம் குறித்த சோகமான செய்தி கிடைத்ததாக தெரிவித்துள்ளார். அவரது வாழ்நாள் முழுவதும் பொது சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் பாஜக அமைப்பின் விரிவாக்கத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி சாந்தி என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உணவுக்கும் உரங்களுக்கும்  மானியத்தை கட் செய்த பட்ஜெட்… ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது…

அதானியும், பாஜகவும் ஒன்றா?  பிரதமர் ஏன் பொங்குகிறார் கொங்கு ஈஸ்வரன் கேள்வி…!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில்  நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு…