அதிரடியான ஐந்து தேர்தல் வாக்குறுதிகள் – ப்ரியங்கா காந்தி

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொது செயலாளர் ப்ரியங்கா வத்ரா அதிரடியாக ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

குடியுரிமைச் சட்டத்தை நீக்குவது, ஐந்து லட்சம் அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவது,தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 365-ஆக உயர்த்துவது,ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 2000 ரூபாய் மாத ஊதியமாக வழங்குவது ஆகும்.மேலும் இந்த தேர்தல் நம்பிக்கைக்கான தேர்தல் என்றும் ஐந்து வருடத்திற்கு முன்பு 25 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக கூறி மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் அதற்கு பதிலாக அவர்களுக்கு கிடைத்தது குடியுரிமைத் திருத்த சட்டம்தான் என்றார்.தற்போது காங்கிரஸ் கொடுப்பது வெறும் வெற்று வாக்குறுதியல்ல அது உறுதியான நம்பிக்கை என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *