மேற்கு வங்க தேர்தலில் புதிதாக வேட்பாளர்களை நிறுத்த திட்டம்:திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கமானது தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் அம்மாநிலத்தின் ஆளும் திரிணாமல் காங்கிரஸ் தற்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணித்து புதிதாக இளைஞர்கள்,மகளிர் மற்றும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பவர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 12 பேர் கொண்ட தேர்வுக்குழுவை தனது இல்லத்தில் சந்தித்து வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார்.294 தொகுதிகளில் 30 சதவீதத்துக்கு மேலாக புதிய வேட்பாளர்களை நிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.இதில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பா.ஜா.க-வில் இணைந்த 19 சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *