சீன கணினி வைரஸ் இந்தியாவை குறிவைத்து அனுப்பப்பட்டது: அமெரிக்கா தகவல்
இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது.
அண்மையில் இரு நாடுகளும் தங்களது படைகளை லடாக் எல்லைப்பகுதியிலிருந்து விலக்கி கொண்டது.இந்நிலையில் அமெரிக்க இணைய பாதுகாப்பு நிறுவனம் சீனாவானது இந்தியாவை குறிவைத்து வைரஸ் ஒன்றை அனுப்பியிருக்கலாம் என நியூயார்க் டைம்ஸ்-ல் வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 12-ஆம் நாள் நடைபெற்ற மும்பை கணினி சேவை துண்டிப்பானதும் சீனாவின் செயலாக இருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற நாச வேலைகள் அரசாங்கத்தையும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களையும் குறிவைத்து நிகழ்த்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்தியா தரப்பில் மும்பை சதியில் எந்தவொரு பாதிப்பும் அரசுக்கு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.