கிரெடிட் கார்டு மூலம் வாடகை; ரூ1000 வரை கேஷ்பேக் – Paytm
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.
இதன்படி, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டு வாடகையை தங்கள் கிரெடிட் கார்டு மூலமாகவே கட்டிக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் 1000 ரூபாய் வரை கேஷ்பேக் பெறும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு மாதமும் இம்மாதிரி கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், கிரெட் கார்டில் வாடகை செலுத்துபவர்கள் கூடுதலாக 1.65% அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக உங்கள் வாடகை ரூ.10,000- ஆக இருந்தால், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் ரூ.10,165 செலுத்த வேண்டும். இருப்பினும், யுபிஐ, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் மூலம் வாடகை செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம்
வசூலிக்கப்படுவதில்லை.
இதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் கல்வி கட்டணம், வீட்டு உதவி சம்பளம் போன்ற கட்டணங்களை கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது.