வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் செலுத்தப்படுவதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில், கவுண்ட் டவுன் முடிந்து இன்று காலை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவண் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பிரேசிலின் அமேசினையா செயற்கைக்கோள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் எஸ்டி சாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட19 செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.
இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிட் (என்எஸ்ஐஎல்) சார்பில் முதல் முறையாக வர்த்தகரீதியாக பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக இஸ்ரோ நிறுவனத்துக்கு அந்நியச் செலாவணியும் கிடைக்கும்.
இந்த செயற்கைக்கோள்கள் விண்ணிலிருந்து புறப்பட்ட 17 நிமிடங்களில் பிஎஸ்4 இன்ஜின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பிரதான செயற்கைக்கோளான பிரேசிலின் அமேசேனியா செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். அதன்பின் 58 நிமிடங்களுக்குப் பின் ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு, மீதமுள்ள 18 செயற்கைக்கோள்களையும் அடுத்த 4 நிமிடங்களில் நிலைநிறுத்தும். ஒட்டுமொத்தமாக ராக்கெட் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பயணிக்கும்.