பிரதமர் மோடிக்கு குலாம் நபி ஆசாத் புகழாரம்

மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

கிராமத்து பின்னணியை அடிப்படையாகக் கொண்ட குலாம் நபி ஆசாத் மூன்று வருடம் முதல்வராக இருந்தவர்.தனக்கும் பிரதமர் மோடிக்கும் ஒற்றுமை உள்ளது என கூறிய அவர் பிரதமர் தான் கடந்து வந்த பாதையை மறக்கவில்லை என்றார்.உதாரணமாக தான் தேநீர் விற்றதை பிரதமர் மோடி ஒரு போதும் நினைவுகூற மறப்பதில்லை மற்றும் மறைப்பதும் இல்லை என கூறினார்.ஜம்முவில் பொது நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆசாத் தனக்கு நிறைய தலைவர்களை பிடிக்கும் எனவும் தான் கிராமப்புரத்திலிருந்து உயர்ந்த இடத்துக்கு வந்ததை பெருமையாக நினைப்பதாகவும் கூறினார்.அப்போது அவர் நமது நாட்டின் பிரதமரும் கூட கிராமத்திலிருந்து வந்தவர் என்றும் தேநீர் விற்பதை வழக்கமாக வைத்திருந்தவர் என்றும் பெருமையாக கூறினார்.அரசியலில் நாங்கள் எதிர் எதிர் அணியில் இருந்தாலும் பிரதமர் மோடியின் எதையும் மறைத்து கூறாத பண்பை நான் பாரட்ட கடமை பட்டிருக்கேன் என்றார்.பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தின் பிரிவு உபசார கூடுகையில் கண்ணீர் மல்க அவருக்கு விடையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *