டிக்டாக் பிரபலம் மரணம்… அமைச்சர் ராஜினாமா!

அமைச்சர் சஞ்சய் ரத்தோட் மீது புகார் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் நகரிலிருந்து புனேவுக்கு படிப்பிற்காக வந்த டிக்-டாக்கில் பிரபலமான இளம்பெண் பூஜா சவான் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் மரணத்திற்கும், சிவசேனாவை சேர்ந்த வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோடுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த விவகாரத்தில் சஞ்சய் ரதோட் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. ஆனால், சஞ்சய் ரத்தோட் கூறுகையில், இளம்பெண்ணின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது என கூறினார்.

பா.ஜ.க. தொடர்ந்து இந்த விவகாரத்தில் நெருக்கடி அளித்து வந்த நிலையில் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியர்களிடம் கூறுகையில், தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *