மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தே தீரும் – ஸ்மிருதி இரானி

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

 ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் விலகி பாஜக மற்றும் பிற கட்சிகளில் இணைந்து வருகின்றன. இதனால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், பஞ்ச்போட்டா பகுதியில் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “மம்தா பானர்ஜியின் ஆட்சி வன்முறை  ஆட்சியையே கொண்டுள்ளது. இந்த முறை, மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தே தீரும். பரப்புரையில் கூடும் மக்களே அதை உறுதி செய்கிறார்கள்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *