பங்களாதேஷ்-ற்கு ஹெலிகாப்டரை பரிசளிக்கும் இந்திய விமானப் படை
1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் சுதந்திரப் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்று 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.
இந்த போரில் பாகிஸ்தான் இராணுவமானது பங்களாதேஷ்-லிருந்து வெளியேற்றப்பட்டது மேலும் 90000 பேர் சரணடந்தனர்.இதனை நினைவுகூறும் வகையில் இந்திய விமானப் படை தலைவர் RKS Bhadauria அலொட்டி-3 ஹெலிகாப்டரை பங்களாதேஷ்-ற்கு பரிசாக அளித்தார்.பங்களாதேஷ் தரப்பில் F-86 சஃப்ரே விமானத்தை இந்தியாவிற்கு பரிசாக அளித்தது.இவை இரண்டுமே அவரவர் நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்வானது இந்திய விமானப் படை தலைவர் பங்களதேஷ்-ற்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்றது.