பாஜகவில் ‘மெட்ரோ மேன்’

கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக விஜய் யாத்திரா நடைபெறுகிறது.

கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் நடந்த விஜய் யாத்திரை நேற்றிரவு சங்கரம்குளம் பகுதியை வந்தடைந்தது. அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் முறைப்படி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் ஸ்ரீதரன்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவினர் ஸ்ரீதரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேடையில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் ஸ்ரீதரன், ”தன் வாழ்வில் இதுவே மிகப்பெரிய தருணம் என்றார். பாஜகவில் இணைந்து மக்கள் சேவையாற்ற வாய்ப்பளித்த பாஜகவுக்கு நன்றி தெரிவித்தார். கேரள பாஜக தலைவர் சுரேந்திரனுக்கும் நன்றி ” என்று பேசியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தான் பாஜகவில் இணைவது ஏன் என பேட்டியளித்த ஸ்ரீதரன், “கேரள மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணி செய்யவில்லை. கேரளாவுக்கு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே பாஜகவில் இணைவுள்ளேன். இதுமட்டுமே எனது நோக்கம். கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…