சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு

சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி, கடந்த ஆண்டில், 16.15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2020ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து, சீனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 16.15 சதவீதம் அதிகரித்து, 1.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய ஆண்டான, 2019ல், 1.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் காரணமாக, சீனாவுக்கு இடையேயான வர்த்தக பற்றாக்குறை, 19.39 சதவீதம் குறைந்துள்ளது. கரும்பு வெல்லம், சோயா எண்ணெய், தாவர எண்ணெய் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மாம்பழம், மீன் எண்ணெய், தேயிலை, திராட்சை பழங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் சரிவு காணப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து, மின் சாதனங்கள், பாய்லர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மரச் சாமான்கள், விளையாட்டு சாதனங்கள், பொம்மைகள், செராமிக் பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதி குறைந்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *