சீனாவை சமாளிக்க ரஷ்யாவில் முதலீடு செய்கிறதா இந்தியா?

தொடர்ந்து மாறிவரும் உலக அரசியலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த இந்தியவானது ரஷ்யா-வின் கிழக்கு பகுதியில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கடந்த வாரம் இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் ஸ்ரிங்லா ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார்.அங்கு அவர் ரஷ்யாவின் வெளியுறவுதுறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.மேலும் அவர் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் நிலக்கரி,மரம்,இயற்கை எரிவாயு போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.கொரோனா பரவலுக்கு பிறகு ரஷ்யா-சீனா இடையேயான உறவு நெருக்கமானதையடுத்து வெளியுறவு துறை செயலர் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடதக்கது.