கர்நாடக கல்குவாரியில் வெடிவிபத்து;6 பேர் பலி

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம், ஹிரெனகவல்லி பகுதியில் உள்ள கல் குவாரியில், பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த போலீசார், கல்குவாரியில் ஜெலாட்டின் குச்சிகளை பற்ற வைக்கும் போது, தான் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் எடியூரப்பா, வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

வெடிவிபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‛கல்குவாரி வெடி விபத்தில் 6 பேர் பலியான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,’  என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *