கடன் தள்ளுபடி செய்தது தெரியாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜக்தர் சிங் பாஜ்வா மற்றும் அவரது மகன் கிருபால் சிங் பாஜ்வா  ஆகிய இரு விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர்.   கடன் தொல்லையால் தான் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. ஜக்தர் சிங் பாஜ்வா 3 ஏக்கர்கள் நிலம் வைத்துள்ள சிறு விவசாயி. இதில் 2 ஏக்கர்களை தன் மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்தார். இவரது ஒரு ஏக்கர் நிலத்தை தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்காக விற்று விட்டார்.

தந்தை மகன் இருவருக்கும் சேர்த்து ரூ.6.50 லட்சம் கடன் இருந்திருக்கிறது.

இந்நிலையில், சொசைட்டியிலிருந்து கிருபால் சிங்கிற்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதில், ”உங்கள் மீது ரூ.1,67,365 கடன் தொகை நிலுவையில் உள்ளது. 2018 ஜூலை 31 லிருந்து கடன் தொகை செலுத்தப்படவில்லை. எனவே, வட்டித்தொகை ரூ.38,000 சேர்த்து மொத்தமாக கடன் தொகை ரூ.2,15,418 ஆக அதிகரித்துள்ளது.  15 நாட்களுக்குள் இந்த தொகையை செலுத்தவில்லை எனில் நடவடிக்கை பாயும்” என்று கூட்டுறவு சங்கம் எச்சரித்திருந்தது.

இதனால் தான் இரண்டு பேரும் கடனுக்குப் பயந்து தற்கொலை செய்துள்ளனர். ஆனால்,  2017-ம் ஆண்டு பஞ்சாப் அரசு அறிவித்த கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இவர்கள் கடன் தள்ளுபடிக்கான கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கம் இதனை பாஜ்வாக்களிடம் தெரிவிக்காததால் அவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆனால், சொசைட்டியின் செயலர் அம்ரித் சிங், தனக்கு இத்தகைய நோட்டீஸ் பற்றித் தெரியாது. கடந்த செப்டம்பர்-அக்டோபரிலேயே கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டு விட்டது என்றார்.

கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தகவலை சரியாக் தெரிவிக்காததால், தற்போது இரண்டு உயிர்கள் பரிதாபமாக பிரிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *