58 ஆண்டுகளுக்குப் பிறகு நாகலாந்து சட்டப் பேரவையில் முதல் முறையாக பாடப்பட்ட தேசிய கீதம்!

நாகலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநில சட்டப் பேரவையில் முதல் முறையாக தற்போது தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை நாகாலாந்து சட்டப் பேரவையில் தேசிய கீதம் பாடப்பட்ட தில்லை. இந்நிலையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவையில் முதல் முறையாக தற்போது தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு ஆலோசகர் நிதின் ஏ. கோகலே தனது ட்விட்டர் பதவில் பகிர்ந்துள்ளார். தேசிய கீதத்தை ஒலிக்கவிட்டு அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நாகாலாந்து சட்டப்பேரவை செயலர் அந்தோணி கூறும்போது, ”பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு முன்னரும், பின்னரும் தேசிய கீதம் பாடப்படும். பெரும்பாலான மாநிலங்களில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நாகாலாந்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தேசியகீதம் இதுவரை பாடப்பட்டதில்லை. இதுவே முதல்முறையாகும். தேசிய கீதம் பாடப்படுவதற்கான முயற்சியை பேரவை சபாநாயகர் ஷரிங்கைன் லாங்குமெர் எடுத்தார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…