இந்திய மொழிகளின் ‘அம்மா’ தமிழ் மொழி – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

சேலத்தில், நேற்று பாஜக இளஞரணி மாநாட்டு நடைபெற்றாது. அதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் அவர், “ சகோதர, சகோதரிகளே! அனைவருக்கும் வணக்கம். வெற்றிவேல்! வீரவேல்! 7.5 கோடி தமிழ் மக்கள்.  இதில் 1.30 கோடி இளைஞர்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கு என் வணக்கம். அதுவும் தொழில்முனைவோரும், பழமையான பண்பாடும் கொண்ட சேலம் மக்களிடம் நின்று பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் மிகப் பெரிய மாவீரர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்டோர் ராணுவம், கப்பற்படைக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்த மக்களுக்கு என் வணக்கங்கள். உலகின் மிகவும் பழமையான தமிழ் மொழி மிகவும் அழகானதும் கூட. மேலும், இந்திய மொழிகளுக்கு எல்லாம் அம்மாவாக தமிழ் மொழி விளங்குகிறது.

மகாத்மா திருவள்ளுவர் பிறந்த மண். அவரது திருக்குறள் நமக்கு மிகப் பெரிய அறிவுபெட்டகமாக இருக்கிறது. திருக்குறள் வழிதான் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மிகவும் அழகான இந்த தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன்.


தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியானது மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற்று சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என விரும்புகிறேன். சேலம் மாம்பழம், இரும்பு ஆலை, சேலம் மரவள்ளிக்கிழங்கு போன்றவை நீண்டகாலமாக பிரபலமாக இருக்கிறது. அண்மையில் சேலத்தில் மோடி இட்லி பிரபலமாகவும் மக்கள் அதை விரும்புவதாகவும் கேள்விபட்டேன்.

நாளுக்கு நாள் தேசத்துக்கான அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. நமது பங்குச் சந்தை ஜல்லிக்கட்டு காளை போல வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ6,000 மத்திய அரசு வழங்குகிறது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈழத் தமிழ் அகதிகள் விஷயத்தில் பிரதமர் மோடி நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் பிரதமர் இந்தியாவின் மோடி தான். அப்போது 27,000 வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி. ஈழத் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *