அமைச்சருக்கே இந்த நிலைமையா? செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்!
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறி பேசிய நிகழ்வு நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ், அசோக்நகர் மாவட்டம் அம்கோ கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தங்கியிருக்கிறார். அப்போது அங்கே பொருட்காட்சி ஒன்றில் இருந்த ராட்டினத்தில் ஏறி அவர் போன் பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியானது.
அதைப்பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். இதுதான் டிஜிட்டல் இந்தியாவா, அமைச்சருக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள் என மீம்ஸ் பதிவிட்டு அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்துவிட்டனர்.
அந்த போட்டோ இணையத்தில் தீயாக பரவியதை அடுத்து, இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். ”அந்த கிராமம் மலைகளால் சூழப்பட்டது என்பதால் சிக்னல் கிடைக்கவில்லை. மக்கள் பிரச்னைகாக தான் ராட்டினத்தில் ஏறி பேசினேன்” என கூறியுள்ளார்.